இந்திய அணி ஆஸ்திரெலியாவுக்கு இந்த மாத இறுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அங்கு வழங்கப்படும் உணவில் மாட்டிறைச்சி வேண்டாம் என கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு பி.சி.சி.ஐ கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் வெஜிடேரியன் உணவுகளை அதிகரிக்க வேண்டும் எனவும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.