உலகம் முழுவதும் 1.5 பில்லியன் மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். அதில் இந்தியாவில் மட்டும் 250 மில்லியன் பேர் வாட்ஸ்அப் உபயோகிக்கின்றனர். அதன் ஸ்டேட்டஸ் பிரிவில் புகைப்படங்கள், ஜிஃப், வீடியோ ஆகியவற்றைப் பதிவு செய்தால் 24 மணிநேரம் வரை பார்க்கலாம். தற்போது இதற்கு இடையே விளம்பரம் ஒளிபரப்பாகவுள்ளது.