உள்நாட்டுப்போரால் சிதைந்து வரும் ஏமனின் சூழலைப் பிரதிபலிக்க இந்த ஒரு புகைப்படம் போதும். உலக நாடுகளின் கவனத்தை ஏமனின் பக்கம் திருப்பிய புகைப்படம் இது. இந்தப் புகைப்படத்தில் உலகை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அந்த தேவதை இன்று இல்லை. ஆம் அமல் ஹுசைன் இறந்துவிட்டாள். இல்லை இல்லை.... உலகம் அவளைக் கொன்றுவிட்டது.