சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்தார் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம். இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தைக் கலக்கி வருகிறது. அதில் ரஜினி குத்துச் சண்டை போஸ் கொடுப்பது அவரது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.