``இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமாவை ஏற்க மாட்டோம்'' எனத் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது. எப்போதும் போல நீங்களே எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகத் தொடர்வீர்கள். அதற்கு அனைத்து நிர்வாகிகளும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர் என எழுத்தாளர் சங்கத்தினர் பாக்யராஜுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.