இலங்கையின் தற்போதைய பரபரப்பில் முக்கியத்துவம் பெற்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி ஒருவரை திடீர் பிரதமர் மகிந்த ராஜபக்சே தரப்பு, தங்கள் பக்கம் வளைத்துவிட்டது. அதிபர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. வியாழேந்திரன், அமைச்சராகப் பதவியேற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.