சர்வதேச அழுத்தத்தை அடுத்து இலங்கை நாடாளுமன்றத்தை வரும் 7-ம் தேதி மீண்டும் கூட்டுவதற்கு அதிபர் சிறிசேன அனுமதி அளித்துள்ளார். இதற்கிடையில், ரணிலின் கட்சியைச் சேர்ந்த பாலித ரங்கே பண்டார, `கட்சியைவிட்டு வந்தால் அமைச்சர் பதவியும் 2.8 மில்லியன் டாலர் பணமும் தருவதாக ராஜபக்சே தரப்பு பேரம்பேசினர்’ என்று கூறி அதிர வைத்தார்.