சித்திர ஆட்டதிருநாளுக்காக வரும் 5-ம் தேதி சபரிமலை நடை திறப்பதை முன்னிட்டு 2,300 காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் வரும் செவ்வாய் கிழமை நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் பத்தணம்திட்டா பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.