வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. தொடக்க வீரர்கள் சொதப்பினாலும், குர்ணால் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆட்டத்தால் 17.5 ஓவர்களில் இந்தியா வெற்றிபெற்றது. குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.