சித்திர ஆட்டதிருநாளுக்காக நாளை சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது. கோவிலுக்கு இளம் பெண்கள் வராமல் தடுக்கும் நடவடிக்கையில் இந்து அமைப்புகள் ஈடுபட உள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து சன்னிதானத்தில் 50 வயதை கடந்த 30 பெண் போலீஸார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்படவுள்ளனர்.