வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய குர்ணால் பாண்டியா முதல் போட்டியிலேயே முத்திரை பதித்துள்ளார். பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட அவர், 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். பேட்டிங்கில் 9 பந்துகள் பிடித்து 21 ரன்கள் விளாசினார்.