அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நிச்சயம் இடம்பிடிப்பேன். இதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது. உலகக் கோப்பைக்காகத் தான் விஜய் ஹசாரோ, தியோதர் டிராபி போன்ற தொடரில் விளையாடினேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானே.