வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இதேபோல் ரோஹித் தலைமையில் இந்தியா வெற்றி பெறும் 6 டி20 தொடர் இதுவாகும். அதேநேரம் தொடர்ச்சியாக 7வது டி20 தொடரை இந்தியா கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.