மிலான் மோட்டார் ஷோ-வில் ராயல் என்ஃபீல்டு தனது புதிய KX கான்செப்ட் பைக்கை காட்சிப்படுத்தியுள்ளது. சில நாள்களுக்கு முன் ட்விட்டரில் இந்த பைக்கின் டீசர் படத்தை வெளியிட்டிருந்தது என்ஃபீல்டு. தீபாவளிப் பரிசாக வெளிவந்துள்ள இது 1936-ம் ஆண்டு வெளியான ராயல் என்ஃபீல்டின் KX 1140 பைக்கை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கியுள்ளார்கள்.