மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், இன்று தன் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களைச் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``மக்கள் நீதி மய்யம் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். ஊழலற்ற சுகாதாரமான அரசியல் தேவை என்பதில் மக்கள் நீதி மய்யம் உறுதியாக உள்ளது'' என்றார்.