சினிமா ஷூட்டிங் நடக்க இருப்பதால் 45 நாள்களுக்கு ஜெர்மனி செல்ல அனுமதிக்க வேண்டும் என நடிகர் திலீப், நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சாட்சிகளைக் கலைக்கும் வாய்ப்பு இருக்கிறது என அரசுத்தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையை நவம்பர் 9-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.