அயோத்தியில் மிகப்பெரிய ராமர் சிலை அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அயோத்தி நகரம் மாநிலத்தில் சிறந்த நகரமாகக் கட்டமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.