இலங்கையில் தொடரும் அரசியல் குழப்பத்தின் இடையே,  அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்துப் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள்,  அவர் கேட்டுக்கொண்டபடி மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க, தங்களால் முடியாது என்று நேரிலேயே உறுதிபடக் கூறிவிட்டனர்.