`இலங்கையின் திடீர்ப் பிரதமர் ராஜபக்சேவுக்கு ஆதரவளிக்க முடியாது’’ என்று மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே தமிழ்க் கூட்டமைப்பானது மகிந்தவுக்கு எதிராக வாக்களிப்பதாகத் தீர்மானித்துள்ள நிலையில், இவர்களும் அதே முடிவெடுத்திருப்பது, இலங்கை அரசியலில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.