நியூஸிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 43 ரன்கள் அடித்து அந்நாட்டு வீரர்கள் புதிய சாதனை படைத்திருக்கிறார்கள். நார்தன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள், ஜோ கார்ட்டர் மற்றும் பிரெட் ஹாம்ப்டன் ஆகியோர் வில்லியம் லூடிக் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உதவியுடன் 43 ரன்கள் குவித்தனர்.