ஐக்கிய நாடுகள் சபை அஞ்சல் அமைப்பு, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தபால்தலைகளை வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் பரிமாறப்படும் கடிதங்களில் பயன்படுத்தும் வகையில், இந்த தபால்தலைகள் உள்ளன. தீபாவளியைக் கொண்டாடும் வகையில் Happy Diwali என்ற வாசகங்களும், தீபங்களின் படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.