`நீ சாப்பிட உட்கார்ந்தபோது ஒரு நாய் பசியுடன் உன்னிடம் வந்ததல்லவா? நீயும் அதற்குச் சோள ரொட்டியைத் தந்தாயே! அந்த நாய் யார் என்று நினைத்தாய்? நாய், பூனை, பன்றி என அத்தனை ஜீவன்களிலும் நானே உள்ளேன். எந்த ஜீவனிலும் நீ என்னையே காண்பாய்!' - ஷீர்டியில் பெண் பக்தையிடம் பாபா சொன்ன வார்த்தைகள் இவை.