ஐ.பி.எல் போட்டியின்போது ஜடேஜாவுக்கும் தனக்கும் இடையே நடந்த சில நிகழ்வுகள் குறித்து ஷேன் வார்னே தனது சுயசரிதைப் புத்தகத்தில் தெரிவித்துள்ளார். ஜடேஜா தாமதமாகத்தான பயிற்சிக்கு வருவார். மைதானத்திலிருந்து அறைக்குத் திரும்பும்போது பேருந்தை நிறுத்தி ஜடேஜாவை இறக்கிவிட்டுவிட்டேன். அதற்கு பின்பு எந்த வீரர்களும் தாமதமாக வரவில்லை என்றார்.