‘ஜெயலலிதா இல்லாததால் பலருக்குக் குளிர்விட்டுப் போய்விட்டது. அவர் இருந்திருந்தால், இதுபோன்ற படங்களை எடுக்க முடியுமா? சமுதாயத்தின் கருத்துகளைப் பிரதிபலிப்பதாகப் படம் எடுத்தால், அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தன்னை முன்னிலைப் படுத்த படம் எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று அமைச்சர் ஜெயக்குமார்  `சர்கார்' படத்தை விமர்சித்துள்ளார்.