விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்துக்கு அ.தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்னை காசி திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அ.தி.மு.க-வினர் கிழித்து எறிந்தனர். இதைத் தொடர்ந்து மற்ற சில திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை ரசிகர்களே அகற்றினர். இதனால் சர்கார் திரையிடப்படும் திரையரங்குகளில் பரபரப்பு நிலவுகிறது.