வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் தண்டனை பெற்ற புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியின் என்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ அசோக் ஆனந்த்தை தகுதி நீக்கம் செய்து புதுச்சேரி சட்டப்பேரவை அதிரடியாக அறிவித்திருக்கிறது. ஏற்கனவே இவருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.