சபரிமலை தந்திரி தன்னிடம் கேட்டுவிட்டுதான் கோயில் நடையை அடைத்தார் எனப் பேசிய கேரள பா.ஜ.க. தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை மீது பிணையில் வரமுடியாத பிரிவுகளில் கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஷைபி என்பவர் கொடுத்த புகாரின் அடைப்படையில் வழக்கு போடப்பட்டுள்ளது. இது கேரளாவில் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.