பெரம்பலூரில் பேசிய ஸ்டாலின், ``1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த நேரத்தில் மோடி, கறுப்புப் பணம் ஒழியும்,  ஊழல் அடியோடு ஒழிக்கப்படும், கள்ளநோட்டு குறையும், தீவிரவாதம் அடக்கப்படும் என்று சொன்னார். இது எல்லாம் நிறைவேறிவிட்டதா? மோடி மஸ்தான் வித்தைக் காட்டி மக்களை ஏமாற்றியுள்ளார்" எனக் கடுமையாக சாடினார்.