ஆடு மேய்ப்பவர்களின் வாழ்வியலையும், அதன்கூடவே காதல், வன்மம் சொல்லுகின்ற  படம்தான் `தொரட்டி'. ஆடுகளுக்குத் தேவையான இலை, தழைகளைப் பறிப்பதற்காக வைத்திருக்கும் சிறிய ஆயுதம் தொரட்டி. சர்வதேச விழாக்களுக்கு படத்தை அனுப்பிவைத்ததில், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிப்பு உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளதாக இயக்குநர் கூறியுள்ளார்.