தஞ்சாவூரில் சர்கார் படத்துக்கு எதிராக அ.தி.மு.க.வினர் இன்று  நடிகர் விஜய்யின் கொடும்பாவி எரித்து போராட்டம் நடத்துவதாக இருந்தனர். ஆனால், விரைவில் தஞ்சாவூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வர இருப்பதால் ஆர்ப்பாட்டம் மட்டும் போதும். கொடும்பாவி எரிக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.