`சர்கார்’ படத்தில் நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய காட்சிகள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. மிக்ஸி மற்றும் கிரைண்டர் முதலிய பொருள்களைத் தீயில் தூக்கி வீசுவது போன்ற காட்சி நீக்கப்பட்டுள்ளது. படத்தில் நடித்த வரலட்சுமியின் கதாபாத்திரப் பெயரான கோமளவல்லியில், `கோமள’ என்ற வார்த்தை மட்டும் மியூட் செய்யப்பட்டுள்ளது.