திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் 6-வது நாளான இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதற்காக பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். பாதுகாப்பு பணிக்காக 5 மாவட்ட போலீஸ் வரவழைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.