கந்த சஷ்டி விழாவின் முக்கிய நாளாக இன்று மாலை திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. ஞானசக்தியான முருகப்பெருமான், கிரியா சக்தியான தெய்வானையைத் தன்னுடன் இணைத்துக்கொள்ளும் தெய்வீக நிகழ்வே முருகன் - தெய்வானை திருமணம்.