ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவர் ரஹ்மான் இசையில் வெளியான ஒரு பாடலை (தெலுங்கில்) பாடியிருந்தார். இவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஏ.ஆர்.ரஹ்மான் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு’ இது யார் எனத் தெரியவில்லை. அருமையான குரல்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின் செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.