மயிலாடுதுறை அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் கோயில் துலா உற்சவப் பெருவிழா கடந்த வாரம் தொடங்கியது. துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கஜா புயல் காரணமாக காலையே தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.