இந்தியாவில், மொத்தம் 45 நகரங்களில் 45,000 உணவகங்களுடன் இணைந்து செயல்படும் ஸ்விக்கியில், தற்போது டெலிவரி செய்யும் வேலையில் மட்டும் ஒரு லட்சம் பேர் உள்ளனர். உணவுத் துறையில் பெண்களுக்கான வேலையை அதிகரிக்க 2,000 பெண்களை டெலிவரி சார்ந்த வேலைகளுக்குப் பயிற்சி கொடுத்துப் பணியமர்த்தப்போவதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.