ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளி வந்த 'காதலன்' படத்தில் இடம் பெற்ற 'என்னவளே என்னவளே' என்ற பாடலின் தெலுங்கு வெர்ஷனான 'ஓ செலியா' என்ற பாடலை கிராமத்தைச் சேர்ந்த  பெண் ஒருவர் தன் குரலில்  பாடி அசத்தினார். தற்போது அவருக்கு பிரபல தெலுங்கு பட இசையமைப்பாளர் சலூரி கோட்டீஸ்வர ராவ், தன் படத்தில் பாட வாய்ப்பு வழங்கியுள்ளார்.