வேலூர் அருகே ஒடுகத்தூர் கொட்டாவூர் கிராமத்தில் ஐயப்பன் கோயில் கட்டிவருகின்றனர். இது தொடர்பாக அருள்வாக்கு சொன்ன முதியவர் ஒருவர் நடுக்காட்டில் குறிப்பிட்ட இடத்தில் ஐயப்பன் சிலை ஒன்றுஇருப்பதாக தெரிவித்தார். அவர் சொன்ன இடத்தில் ஐயப்பன் சிலை இருக்கவே பக்தர்கள் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தனர்.