இன்ஸ்டாகிராம் தளத்தில் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட 'Download Your Data' வசதியில் கோளாறு ஏற்பட்டது எனவும் இதனால் தங்களது பாஸ்வேர்டுகள் கசிந்திருக்கலாம் என சில பயன்பாட்டாளர்களை எச்சரித்துள்ளது இன்ஸ்டாகிராம். எனவே, பாதிக்கப்பட்டவர்களிடம் பாஸ்வேர்டுகளை மாற்ற சொல்லியிருக்கிறது இன்ஸ்டாகிராம்.