கேரளாவில் `நில்லு நில்லு சேலஞ்ச்’ விபரீத சேலஞ்ச் இளைஞர்களிடையே பரவி வருகிறது. சாலையில் சென்றுகொண்டிருக்கும் வாகனங்களை இடைமறித்து நடனமாடுவதுதான் இந்தப் புதுவித சேலஞ்ச். இந்த விபரீத விளையாட்டை தடுத்து நிறுத்த கேரள காவல்துறை நகைச்சுவை உணர்வுடன் கூடிய விழிப்பு உணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. #Nillunilluchallenge