ஜப்பானிய தொலைத்தொடர்பு நிறுவனமான NTT டோகோமோவும், மிட்சுபிஷி எலெக்ட்ரிக் நிறுவனமும் இணைந்து நடத்திய 5G பரிசோதனையில்  நொடிக்கு 27 ஜிபி என்ற அளவை எட்டியிருக்கிறது இணைய வேகம்.  இதுதான் இதுவரை நடத்தப்பட்ட 5G பரிசோதனைகளில் எட்டப்பட்ட அதிக பட்ச வேகம் எனவும் டோகோமோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.