‘மாரி 2’ படம் டிசம்பர் 21-ம் தேதி வெளியாகவுள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷுடன் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், கிருஷ்ணா ஆகியோர் நடித்திருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘ரவுடி பேபி’ பாடல் இன்று வெளியானது. தனுஷ் வரிகளில் பிரபுதேவா நடன இயக்கத்தில் இந்தப் பாடலை வீடியோவாக காண ரசிகர்கள் ஆர்வமாகவுள்ளனர்.