ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கடலில் மூழ்கடித்ததுடன், 4 மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றனர்.  இதனால் இலங்கைக் கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடலோர பாதுகாப்புக் குழும காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் படகின் உரிமையாளர்.