ஆறு முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் 2020-ல் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வெல்வதே தனது அடுத்த குறிக்கோள் என்று கூறியுள்ளார். மேலும், `நான் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடவுள்ளேன்’ என்றும் தெரிவித்தார்.