ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா எனப் பல பிரபலமான நிறுவனங்களை தன் கைவசம் வைத்திருப்பவர் எலான் மஸ்க். இவர் செப்டம்பர் 6-ம் தேதி Joe Rogan Experience என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேரலையிலேயே கஞ்சா புகைத்தார். இதுவரை இந்த சர்ச்சை ஓயவில்லை. இவரின் செயலுக்கு நாசா கண்டனம் தெரிவித்துள்ளது.