சென்னை மடிப்பாக்கம் சபரி சாலையில் இருக்கும் ஐயப்பன் கோயிலில் பிரம்மோற்சவ விழா  16 - ம் தேதி தொடங்கி, 10 நாட்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வான வேடிக்கைகளும்  சுவாமி ஊர்வலமும் நடைபெற்றன.