இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் தேர்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதிய தலைமைப் பயிற்சியாளரை தேர்வு செய்யும் வாய்ப்பு சச்சின், கங்குலி, லட்சுமண் அடங்கிய குழுவுக்கு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. அதேநேரம் மகளிர் அணிக்கு பிசிசிஐ ஒரு பெண் பயிற்சியாளரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.