இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன், தனது சுயசரிதையில், `இந்திய அணியின் பயிற்சியாளராக கிரேக் சேப்பல் இருந்த காலகட்டம் சோதனையானது. அவர் வீரர்களுடன் இணக்கமான போக்கைக் கடைபிடிக்கவில்லை. அதேபோல், ஒரு சர்வதேச அணியை எப்படி வழிநடத்துவது என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை’ என்று விமர்சித்திருக்கிறார்.