ஃப்ரான்ஸில் எரிபொருள், அத்தியாவசியப் பொருள்களின் வரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து நேற்று பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இறுதியில் போராட்டம் கலவரமாக வெடித்துள்ளது. ஃப்ரான்ஸ் நாட்டில் தற்போது வரலாறு காணாத மிகப்பெரும் கலவரம் நிலவிவருவதால், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.