தெலுங்கு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை காஜல் அகர்வால், `அடுத்தாக கமல் சாருடனும் ஒரு படம் நடிக்கவுள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார். கமல் நடிப்பில் அடுத்தாக  இந்தியன்-2 படமே படமாக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் காஜல் இந்தியன் 2-வில் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதை ஷங்கர் இயக்கவுள்ளார்.